Home Article தெருக்கூத்து – மேற்கத்தி பாணி

தெருக்கூத்து – மேற்கத்தி பாணி

by G. Palani
0 comment

சேலம், தருமபுரி, நமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்து மரபு மேற்கத்தி பாணி என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்த பாணி சார்ந்த கலைஞர்கள் இருவேறு பின்புலங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அதாவது, ஒரு மரபினர் தோற்பாவை நிழற்கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தவர்கள், பின்னர்   தெருக்கூத்தர்களாக மாறியுள்ளதாகவும் மற்றொரு மரபினர் தென்னாற்காடு, வடஆற்காடு பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து தருமபுரி மாவட்டப் பகுதிகளில் குடியமர்ந்தார்கள். அவர்கள் வழியாகக் கற்று தெருக்கூத்தாடுவதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறெனில் அப்பகுதியில் பூர்வீகமானத் தெருக்கூத்துக் கலைஞர்கள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. தெருக்கூத்து நிகழ்த்தப்பட்டு வரும் மேற்கு மாவட்டங்களில் வாழும் சமூகங்களையும் சமகாலத்தில் தெருக்கூத்தை நிகழ்த்திவரும் கலைஞர்களையும் இணைத்துப் பார்க்குமிடத்து இது தெளிவாகும். அருந்ததியர், ஆதிதிராவிடர், குறவர், கவுண்டர், வன்னியர், வெள்ளாளர், முதலியார் போன்ற சமூகத்தவர்கள்  இப்பகுதியில் கூடுதலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் அருந்ததியர், குறவர், ஆதிதிராவிடர், வன்னியர் சமூகங்களைச் சார்ந்தவர்கள்  பரவலாகத் தெருக்கூத்துக் கலைஞர்களாக இருந்து வருகின்றனர். மற்ற சமூகத்தவர்கள் கூத்தில் குறைவாகவே காணப்படுகின்றனர். மேற்சுட்டிய கலைஞர் சமூகத்தவர்களின் வழிபாட்டிற்கும் சடங்கியல் நிகழ்வுகளுக்கும் காலம் காலமாகக் கூத்துகள்  நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சமூகம் சார்ந்த தோற்றக் கதைகள் இக்கருத்தை உறுதி செய்கின்றன.

You may also like

Leave a Comment