Home Rituals ஆய்வாளர் தொ.பரமசிவம்

ஆய்வாளர் தொ.பரமசிவம்

by admin
0 comment

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் ஆய்வுலகம் நன்கறிந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்ச்சமூகம் தொடர்பான பன்முகத்தன்மை கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து நிகழ்த்தி வருபவர். இவர் தொல்லியல், மானுடவியல் சமூகவியல், இலக்கியம் என்ற பல்துறைகளில் அறிஞர் என்ற பெருமைக்கும் உரியவர். இந்த நூற்றாண்டின் தமிழ் ஆய்வுலகிற்குக் கிடைத்த சிறந்ததொரு அறிஞர் இவர் என்பது மிகையல்ல.

தமிழ் மரபு அறக்கட்டளை பேரா. தொ.ப அவர்களை 2015ம் ஆண்டின் ”சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்” என்ற விருதளித்து சிறப்பு செய்தோம். தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர் அளித்த நேர்காணலை இந்த விழியப் பேட்டியில் காணலாம்.

Recorded on: 17.12.2015 Recorded by: Dr.K.Subashini (Tamil Heritage Foundation)

 

You may also like

Leave a Comment